காலை டிபனுக்கு நைட் டிபனுக்கு ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை ஒரு கட்டு
மூன்று வர மிளகாய்
ஒரு தக்காளி பழம்
மூன்று பீஸ் தேங்காய்
ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
ஒன்றை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
மூன்று பல் பூண்டு
ஒரு வெங்காயம்
சிறிதளவு பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
செய்முறை 👇
கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வர மிளகாய் பூண்டு வெங்காயம் தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளி பழம் நன்றாக வதக்கிய பின் அதில் தேங்காயும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
ஸ்டவ் ஆஃப் செய்த பிறகு அதே சூட்டில் கொத்தமல்லி இலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும்
வதக்கிய வெங்காயம் தக்காளி பழம் கொத்தமல்லி இலை ஆரியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அரைத்த சட்னியில் எண்ணெய் கடுகு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தோமான சுவையான “கொத்தமல்லி சட்னி” ஹோட்டல் ஸ்டைலில் தயார்.




