ஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகள் உள்ளதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை தேங்காய் பால் என்பது அனைவரும் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உணவு ஆகும்.

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றம் நீடிக்கும்.

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

Read Previous

அமாவாசை காய்கறிகளில் வாழக்காயை கட்டாயம் சேர்ப்பதன் காரணம் என்ன தெரியுமா..??

Read Next

திருமணத்திற்குப் பின் அண்ணன் தம்பி உறவு, அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular