பட்ஜெட் தாக்கல் செய்ய சென்ற போது நிர்மலா சீதாராமன் கட்டிய புடவையில் இத்தனை சிறப்பம்சங்களா?..

இந்திய நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தனது எட்டாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஏழு பட்ஜெட்டுகளை சமர்ப்பித்த முதல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு புடவைகள் மீதான ஆர்வம் அதிகம் உண்டு.

ஒவ்வொரு வருடமும் அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அவர் அணிந்து வரும் புடவைகள் தனித்துவமிக்கதாகவும் வைரலாகவும் ஆகும். அதுபோல ஒவ்வொரு வருடமும் அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அன்று கட்டும் புடவை கைவினைத் திறன் கொண்டதாக தேர்ந்தெடுப்பார். இது கைவினைகள் மீதான அவரது ஆழமான மதிப்பை காட்டுகிறது.

நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பாரம்பரியமான பாஹி கட்டா சேலையை கட்டினார். அடுத்ததாக மங்கலகிரி பட்டுப்புடவையை தங்க நிற பாடர்களுடன் கட்டி சென்றார். 2020 பட்ஜெட்டில் குறியீட்டு அறிக்கையை வெளியிட நீல நிற பாடர் கொண்ட மஞ்சள் பட்டு புடவையை அணிந்திருந்தார் நிர்மலா சீதாராமன். இந்து கலாச்சாரத்தில் மஞ்சள் ஒரு நல்ல நிறமாக கருதப்படுகிறது. 2021 இல் போச்சம்பள்ளி பட்டுப்புடவையை நிர்மலா சீதாராமன் கட்டி சென்றார். 2022 ஆம் ஆண்டில் பொம்காய் சேலை அணிந்திருந்தார். 2023 ஆம் ஆண்டு சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்திருந்தார்.

2024 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் சிவப்பு பாஹி கட்டா நீல நிற டசார் பட்டுப்புடவை அணிந்திருந்தார். இப்போது இந்த வருடம் 2025-ல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மதுபானி சேலையை கட்டி இருந்தார். இதில் இந்திய கலாச்சாரத்திற்கு சம்பந்தமான பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இன்று இவர் கட்டிய சேலை பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.

Read Previous

ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

SBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 84 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.1,05,280..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular