Oplus_131072
வீட்டில் சுத்தமான தயிரை செய்ய மூன்று வழிகள் உள்ளது.அதில் எனக்கு பிடித்த இரு வழிகளை சொல்கிறேன்.
1️⃣தயிரை வைத்து தயிர் செய்யும் முறை:
🔘பாலை நன்றாக காய்ச்சவும்(பால் தான் தயிராகும்…தண்ணீர் தயிராகாது),காய்ச்சிய பின் அற விடவும்…
🔘ஆறிக்கொண்டிருக்கும் அந்த பால் வெதுவெதுப்பான சூட்டில் உள்ள போது,ஏற்கனவே உள்ள தயிரை ஒரு தேக்கரண்டி அளவு விட்டு நன்கு கலக்கி விட்டு மூடிவிடவும்.
2️⃣தயிர் இல்லாமல் தயிரை செய்யும் முறை:
🔘பாலை நன்றாக காய்ச்சவும்(மீண்டும் சொல்கிறேன் பால் தான் தயிராகும்…தண்ணீர் இருந்தால் இங்கு தயிராகாது),காய்ச்சிய பின்…..வெள்ளி பாத்திரத்தில் அற விடவும்.
🔘பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது, காம்புடன் உள்ள ஒரு முழு வர மிளகாயை பாலில் முழுகும்படி போட்டு மூடிவிடவும்(வர மிளகாய் இல்லை என்றால் பச்சை மிளகாய்).
அவ்வளவு தான் அடுத்த நாள் கெட்டி தயிர் ஆகி இருக்கும்.




