பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இனி வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசின் அருமையான திட்டம்..!!

பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திர பிரதேச  முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.  அதாவது, ‘பெண்கள் வீட்டிலிருந்தே (Work From Home)  ஐடி துறையில் வேலை செய்வதற்கு புதிய ஐடி கொள்கையை செயல் படுத்த உள்ளதாக’  தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தின் மூலம் ‘பெண்கள் அவர்களின் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரிய ஒவ்வொரு மாநகரம், நகரம் மற்றும் மண்டலத்தில் ‘Coworking Space’ நிறுவப்படும்’ என்றும் அறிவித்துள்ளார்.

அதாவது, ‘கிராமப்புறங்களில் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்க ஐடி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் ‘பெண்களின் வேலை – வாழ்க்கை சமநிலைக்கு ஒரு புதிய சகாப்தம்’ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆந்திராவின் இந்த முன்முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

வேலையின்மை மற்றும் அலுவலகத்தில் உள்ள பிரச்சனை தீர இந்த பரிகாரம் பண்ணுங்க போதும்..!!

Read Next

India Post வேலைவாய்ப்பு 2025..!! 21413 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular