கவுனி அரிசியை சாதாரண அரிசியை போன்று தினமும் உட்கொள்ளலாமா..?? இது உடலுக்கு நல்லதா இல்லை கெட்டதா..!!!
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக விளைவது கவுனி அரிசி. இருப்பினும் சமீப காலமாக தான் அதிகமாக இந்த கவுனி அரிசியின் பெயரை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். கவுனி அரிசி கருஞ்சிவப்பு நிறத்தில் இது அனைத்து வகையான மளிகை கடைகளிலும் விற்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இதை ரெட் ரைஸ் என்று கூறுவார்கள்.
இந்நிலையில் அரச குடும்பம் மட்டுமே ஒரு காலத்தில் இந்த அரிசியை உண்ணும் வந்ததாகவும் மற்றவர்கள் உண்ணக்கூடாது என்ற சட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் ஏராளம். இது நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே இருந்து வருகிறது இருப்பினும் சமீபகாலமாக தான் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகம் வாங்குவதாக கூறப்படுகிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து புரதச்சத்து கொழுப்பு சத்து இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி கனிம சத்துக்களான மெக்னீசியம் பாஸ்பரஸ் சிங்க் தாமிரம் துத்தநாகம் போன்ற கனிமங்களும் அதிக அளவு நிறைந்துள்ளன. கருப்பு கவுனி நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் தருவதோடு இதை உண்பதால் ரத்த ஓட்டம் சீராகி கேன்சர் போன்ற நோய்களை வராமல் தடுக்கவும் உதவுகிறது. கேன்சர் போன்ற நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இந்த அரிசிக்கு உண்டு. மற்றும் மலச்சிக்கல் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். கவுனி அரிசி எட்டு மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் 10 டு 12 விசில் விட்டு இறக்கினால் நன்றாக வெந்துவிடும். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த கஞ்சியை உண்ணலாம். மதிய வேலைகளில் சிறிதளவு மோர் கலந்து இதை குடிக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதைக் குடிப்பதால் உடல் எடை புரிந்து. ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.




