குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ட்விஸ்டர்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..??

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ட்விஸ்டர்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..??

பொட்டேட்டோ ட்விஸ்டர்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும் என்று சொல்லலாம். இந்நிலையில் இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு -2
கடலை மாவு – அரை கப்
சோள மாவு – அரை கப்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
தனி மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு ‌- தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்குகளை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்கீவர் குச்சியை உருளைக்கிழங்கில் குத்தவும். கூர்மையான கத்தியின் உனைப் பகுதியால் உருளைக்கிழங்கை ஸ்பைரல் போல சுழற்றி சுழற்றி வெட்டவும். கடலை மாவுடன் சோள மாவு மற்றும் சமையல் சோடா மற்றும் மிளகுத்தூள் சிறிதளவு உப்பு மற்றும் தனி மிளகாய் தூள் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அடுப்பை பற்ற வைத்த அகலமான வாணலியில் எண்ணெயை காய வைத்து உருளைக்கிழங்கை மாவு கலவையில் முக்கி எடுத்து அதிகப்படியான மாவை உதறிவிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதன் மீது மயோனைஸ் சேர்த்து பெரி‌பெரி மசாலா தூவினால் பொட்டேட்டோ ட்விஸ்டர்ஸ் ரெடி.

Read Previous

ஒரு சிறுவன் டீச்சரை சமாளித்த ஜோக்..!! செம்ம செம்ம..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

ஒருமுறை இந்த மாதிரி கோழி கிரேவி வச்சு பாருங்க..!! செம்ம சுவையா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular