உங்கள் கணவர் பாசமற்றவராக நீங்கள் கருத அவர் வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

உங்கள் கணவர் பாசமற்றவராக நீங்கள் கருத அவர் வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள் பற்றி பார்ப்போமா?

 

1. உங்கள் உணர்வுகளை புறக்கணிப்பார்

 

நீங்கள் பெரும் மனப்பாரத்தை சுமந்து கொண்டு இருக்கலாம். உங்கள் மனப்பாரத்தை உங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். ஆனால், உங்கள் கணவர் நீங்கள் தேவை இல்லாமல் கவலைப்படுவதாக சொல்லி, நீங்கள் பேசுவதை புறம் தள்ளும் போது நீங்கள் மனம் வெறுத்து போய்விடுவீர்கள்.

 

2. உங்களை பாதுகாக்க மாட்டார்

 

உங்களை யாரும் ஒரு வார்த்தை சொல்ல அனுமதிக்காத கணவர் வேண்டும் என்பது உங்கள் கனவு. ஆனால் நிஜத்திலோ உங்கள் கணவர் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார். உங்கள் மாமியார் உங்களை வசை பாடும் போது, தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி காட்டி கொள்ளும் போது உங்கள் மனம் பரிதவிக்கும்.

 

3. உங்கள் கணவர் உங்களிடம் பேச மாட்டார்

 

உங்கள் கணவர் அவர் தேவைக்காக தான் உங்களிடம் பேசுவார். உங்களுக்கோ உங்கள் கணவர் உங்கள் மேல் உள்ள காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் உங்கள் கணவரோ, டிவி முன்னால் தன் பொழுதை கழிக்கும் போது, விரக்தியின் உச்சிக்கே சென்று விடுவீர்கள்.

 

4. உங்களுக்கு உரிய மரியாதையை தர மாட்டார்

 

உங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. உங்களுக்கும் அபிப்பிராயங்கள் உண்டு என்று உங்கள் கணவர் நினைக்க மாட்டார். இருவரும் சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாளுவது என்பதை பற்றி உங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பார். உங்களை மற்றவர்கள் முன் எளிதில் விட்டு கொடுத்து விடுவார்.

 

5. குடும்ப பொறுப்பு முழுவதையும் உங்கள் மேல் சுமத்துவார்

 

குழந்தைகளை நீங்கள் தான் பார்த்து கொள்ளவேண்டும். நீங்கள் தான் வீட்டை நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு உங்கள் கணவர் இருப்பார். திருமணம் என்பது இருவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டிய ஒரு கூட்டு வாழ்க்கை என்பதை மறந்து விடுவார். எல்லா குடும்ப பொறுப்புகளையும் உங்கள் கணவர் உங்கள் மேல் சுமத்தும் போது, நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்.

 

உங்கள் கணவர் உணர்வற்றவராக இருப்பது உங்க திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கும். இதைத் தடுக்க, உங்கள் கணவர் உங்களுக்கு உரிய மரியாதை, புரிதல் மற்றும் அன்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே ஒரு ஆரோக்கியமான திருமண வாழ்க்கையை உங்களுக்கு உங்கள் கணவரால் கொடுக்க முடியும்.

 

Read Previous

முக்கியம்.. 50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம்.. படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

முருங்கைக்கீரை என்பது என்ன?.. பயன்பாடுகள், தீமைகள் மற்றும் மருத்துவ குணங்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular