பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பச்சரிசி மாவில் கோலம் போடும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள். இந்த காலகட்டத்தில் அது சற்று குறைந்தது தான் காணப்படுகிறது. இந்நிலையில் பச்சரிசி மாவில் கோலம் போடுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். அதுவும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம். இந்நிலையில் வசதி படைத்த பணக்காரர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வார்கள். ஆனால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்..?? அதற்காக அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதுதான் பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அந்த ம மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின் மீதம் இருக்கும் அரிசி மாவு எடுத்து சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும் எனவே ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி படுத்தும் இந்த முறையை போல் ஆன்மநேயத்தையும் ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு எதுவும் இல்லை. இதனால்தான் பச்சரிசி மாவில் கோலம் போடுகிறார்கள். அதுமட்டுமின்றி பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனதை கவரும். யாராவது புதிதாக நம் வீட்டிற்கு தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது அந்த அழகு கோலங்கள் அவர்களின் எண்ணத்தை சிதற வைக்கும் அதனால் வருபவர் கோபம் மற்றும் கெட்ட எண்ணங்களை வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் வருவார் என்று கூறப்படுகிறது.




