ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு தோசை வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி செஞ்சு பாருங்க..!!
தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது இட்லி கூட பலருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் தோசை பிடிக்காது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய தோசையை வீட்டில் செய்யும் போது இருக்கும் சுவை வேறு. ஆனால் ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு தோசை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு தோசை செய்ய ரவையை மிக்ஸியில் போட்டு பொடித்து அதை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்னர் மாவுடன் கலந்து தோசை சுட்டால் அசத்தலான சுவையில் மொறு மொறுப்பான தோசை கிடைக்கும். உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து கோதுமை மாவுடன் கலந்து வைத்து மறுநாள் சுட்டு எடுத்தால் சூப்பரான சுவையில் ஆரோக்கியமான தோசை தயார்.




