இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..??
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல் பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் களைப்பு மார்பு வலி தீரும் சாப்பிட உடம்பில் பித்த கப நோய்கள் தீரும். இஞ்சி சாறு வெல்லம் கலந்து சாப்பிட வாத கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை துவையல் ஆக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். புதினாவோடு சேர்த்து துவையல் ஆக்கி சாப்பிட பித்தம் அஜீரணம் வாய் நாற்றம் தீரும்.
சுறுசுறுப்பு ஏற்படும் .காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தளை சுட்டு மலச்சிக்கல் தீரும் உடம்பு இளமை பெறும்.




