அப்பா, அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

அப்பா அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு நம்மை பெற்றெடுக்கும் போது நம் அன்னை ஒரு பெரிய வலியை தாங்கி இருப்பாள். கோவிலில் பிரசாதம் கொடுத்தால் கூட தன் பிள்ளைக்காக பத்திரப்படுத்தி எடுத்து வருவாள். அவள் தான் அன்னை.

 

கொஞ்சம் முகம் வாடி இருந்தாலும் என்ன கண்ணு பசிக்குதா என்று ஆயிரம் முறை கேட்டு விடுவாள். நீங்கள் தூங்காமல் படிக்க அவள் தூங்காமல் இருப்பாள் தன் பிள்ளை தப்பே செய்து இருந்தாலும் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அதேபோன்றுதான் அப்பாவும் பெண் பிள்ளை என்றால் அப்பாவுக்கு தான் அதிக பாசம் தன் பிள்ளையின் பாதம் கூட மண்ணில் படக்கூடாது என்று நினைப்பார் என்ன கேட்டாலும் வாங்கி தருவார் பிள்ளைக்காக மனைவியிடம் சண்டை கட்டுவார் பிள்ளையின் படிப்புக்காக பல லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருப்பார் விசேஷங்களுக்கு துணி எடுக்க வேண்டும் என்றால் அம்மா அப்பா இருவருமே பல துணிக்கடைகள் ஏறி இறங்குவார்கள் ஒரு துணி எடுக்கவே இவ்வளவு யோசிக்கும் உங்களது பெற்றோர் உங்கள் திருமணத்தைப் பற்றி எவ்வளவு யோசிப்பார்கள் சாயம் பிடித்துவிட்ட ஜீன்ஸ் பேண்ட் இடுப்பு தெரியும் அளவு சட்டை அழகான இரு சக்கர வாகனம் இதை மட்டுமே வைத்திருக்கும் ஒரு சிலரிடம் காதல் வயப்படுகிறார்கள். 10 நாள் பழகிய ஒருத்தனுக்காக பெற்றவர்களை தூக்கி எறிந்து திருமணம் செய்து கொண்ட பலர் பிழைக்காமல் பெற்றவரை தேடி வந்துள்ளனர் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடந்தால் நீ எப்போது வேண்டுமானாலும் உன் தாய் வீடு வரலாம் பெற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நம் குடும்பத்தை பற்றி உங்கள் பெண்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் முக்கியமாக தந்தைகள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஓடினது போதும் தன் பிள்ளைக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தமிழகத்தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு..!! ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular