முருங்கைக்கீரையை வைத்து பொடி கூட பண்ணலாமா..!! கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கை கீரை ஆகியவை உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகின்றன. இதனை நாம்,  பொறித்தும், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இப்பொழுது முருங்கைக்கீரையில் பொடி எப்படி செய்வது என காண்போம்.

தேவையானவை:

முருங்கைக்கீரை – 5 கப்,

உளுந்து – 200 கிராம்

கடலை பருப்பு – 50 கிராம்,

மல்லி – 2 கரண்டி,

சீரகம் – 2 கரண்டி,

மிளகு – 1 கரண்டி,

காய்ந்த மிளகாய் – 12,

உப்பு – தேவையான அளவு,

பூண்டு – 50 கிராம்,

பெருங்காயத்தூள் – 1/2 கரண்டி.

செய்முறை:

முதலில், முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், பின்னர் அதனை துணியில் சேர்த்து உலரவிட்டு எடுக்க வேண்டும். முருங்கை கீரை நன்கு காய்ந்ததும் வானெலியில் இட்டு மிதமான தீயில் மனம் வரும்வரை வறுக்கவும்.

கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை அடுத்தடுத்து தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கை கீரையுடன் மேற்கூறிய பொருட்களை ஜாரில் சேர்த்து உப்பு, சிறிதளவு புளி, பெருங்காயத்தூள் ஆகியவை போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும். சுவையான முருங்கைக்கீரை பொடி தாயார்.

Read Previous

டீ குடித்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமா..!! டீ பிரியர்களே உஷார்..!!

Read Next

மக்களே ஒரு ஜாக்பாட்..!! மாதம் ரூ.20,000/- ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular