முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை உள்ளது. ஆனால், அவர் அங்கு வந்து வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை நாள் முழுவதும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். அத்தொகுதி பதற்றமான பகுதி என்பதால் அங்கேயே முகாமிட்டிருந்ததாகவும், இதனாலேயே கரூரில் தனது வாக்கைச் செலுத்த முடியவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.




