துளசி பெரும்பாலும் நமக்கு சுலபமாக கிடைக்கும் ஒரு கீரைவகையாகும். அந்த துளசியை நீராக குடிப்பது பலரின் வழக்கம். துளசி நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக துளசி நீரில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. துளசி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காண்போம்.
இந்த துளசி, தோல் பிரச்சனையை சரி செய்யவும் முகப்பருக்களை குணமாபடுத்தவும் மிகவும் உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கவும் உதவும். இந்த துளசி, நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும் இது உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த துளசி நீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.




