இந்திய சீன எல்லைப் பிரச்சனை..!! கேள்வி கேட்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!!

இந்திய சீன எல்லை ராணுவ பிரச்சனை பல காலமாக இருந்து வருகிறது. இதிலும் கடந்த சில வருடங்களாக சீன ராணுவ படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி நமது நாட்டில் சில பகுதிகளை கைவசப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சனை பெரிதாக அவ்வப்போது பார்க்கப்பட்டாலும் மற்ற நேரங்களில் இதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று திரு ராகுல் காந்தி அவர்கள் சீனாவிடம் இருக்கும் இந்தியாவை சேர்ந்த நிலங்களை மீட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் இன்று பங்கேற்று பேசிய ராகுல் காந்தி இந்திய சீன எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தை பற்றி கேள்வி எழுப்பிய திமுக எம்பி திரு டி ஆர் பாலு அவர்கள் அதை மீட்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

தொப்பை குறைய இந்த ஜூஸை 14 நாட்கள் தொடர்ந்து குடிச்சு பாருங்க..!!

Read Next

முதியோர் இல்லம்..!!முற்பகல் செய்த வினை பிற்பகல் தானே வரும் என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular