Oplus_131072
ரோட்டு கடைகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிடைக்கும் மசாலா வேர்கடலை பொறி வீட்டிலேயே சுவையாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த மாதிரி இப்படி செஞ்சு பாருங்க..
தேவையான பொருள்கள்
பொரி – ஒரு கப்
வேர்க்கடலை – ஒரு கப்
மிக்சர் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது ஒன்று.
தக்காளி – பொடியாக நறுக்கியது ஒன்று
கேரட் – ஒரு கேரட் நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய் – பொடியாக நறுக்கியது ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – தேவையான அளவு
சிறிய எலுமிச்சை பழம் – ஒன்று
செய்முறை
பொரி மற்றும் மிக்சர் அல்லது மிக்சருக்கு பதிலாக காராபூந்தி கூட எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். பின்பு வேர்க்கடலையை நன்றாக வேகவைத்து தோலுரித்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை மிச்சர் அல்லது காராபூந்தி இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் வெள்ளரிக்காய் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான மசாலா வேர்க்கடலை பொடி தயார். இதை ஒரு பவுலில் போட்டு பரிமாறுங்கள் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனுடன் சிறிதளவு மாங்காய் துண்டுகளும் வெட்டி சேர்த்தால் சுவை அம்புட்டு ருசியா இருக்கும்.



