தன்னம்பிக்கை கதை..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!
தன்னம்பிக்கை கதை ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள் ஆனால் நன்றாக துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இன்டர்வியூ நடந்தது கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள் email எனக்கு இமெயில் இன்டர்நெட் எல்லாம் தெரியாதே என்றான். தொடைக்க வந்தவன் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு இமெயில் முகவரி இல்லையா என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலையில்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கையில் பத்து ரூபாய் இருந்தது .அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான் பக்கத்துக் குடியிருப்பு பகுதியில் கூவி கூவி விற்றான். பத்து ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்ற சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்த சூழ்நிலையில் ஒரு வங்கி கணக்கு திறக்க சம்பந்தமாக ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவருடைய ஈமெயில் முகவரி கேட்டார் வியாபாரி இமெயில் முகவரி இல்லை என்று பதில் அளிக்க ஈமெயில் இல்லாமலே இந்த காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா உங்களுக்கு மட்டும் இமெயில் இன்டர்நெட் எல்லாம் தெரிந்திருந்தால் என்று ஆச்சரியமாய் கேட்டார் வங்கி ஊழியர். அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரைத்துடைத்துக் கொண்டிருப்பேன் என்றார் வியாபாரி வாய்ப்புகள் விலகும் போது கவலைப்படாதே எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்.




