இந்த வெயில் காலத்தில் நமது உடல் சூட்டை தணிக்கும் கம்பு கஞ்சி..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

இந்த கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் நமது உடல் சூட்டை தணிப்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அப்படி நமது உடல் சூட்டை தணிப்பதில் கம்பு முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து இருக்கிறது. மேலும் ரத்தசோகை இருப்பவர்களுக்கும் இது நல்லதாகும். இன்று கம்பு கஞ்சி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

முதலில் கேரட் பீன்ஸ் கொத்தமல்லி தலைகளை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கம்பை சுத்தம் செய்து ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த கம்பை குக்கரில் சேர்த்து கேரட் பீன்ஸ் காலிபிளவர் பட்டாணி தண்ணீர் மிளகு சீரகம், ஏலக்காய் பிரியாணி இலை கிராம்பு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

காய்கறிகள் சேர்த்துள்ள கலவையை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும். நாம் அரைத்து வைத்திருக்கும் கஞ்சியை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

அது நன்றாக கொதித்த பிறகு எலுமிச்சை சாறு மிளகுத்தூள் கொத்தமல்லி தழைகள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அடுப்பில் இருந்து இந்த கஞ்சியை இறக்கி வைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார்.

Read Previous

IPL 2025..!!டாடிஸ் ஆர்மியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்பொழுது பேபிஸ் ஆர்மியாக மாறியுள்ளது..!!

Read Next

உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் மோர்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular