ஐபிஎல் ஆரம்பித்து அனைத்து அணிகளும் பாதி போட்டிகளை விளையாடி முடிக்கின்ற தருவாயில் இருக்கின்றது. இந்த நேரத்தில் பல அணிகள் முதல் நான்கு இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றது. ஒரு சில அணிகள் பரிதாபமாக கடைசி இடங்களில் இருக்கின்றது. ஆனால் அடுத்து வரப்போகும் போட்டிகளில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் முதல் நான்கு இடத்தை பிடிக்கலாம் என்ற சூழ்நிலை அமைந்துள்ளது.
இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக இந்த தொடரில் விளையாடவில்லை என்று நமக்கு நன்றாகவே தெரியும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் காயத்தின் காரணமாக வெளியேறி அவருக்கு பதிலாக 17 வயது சிறுவனை அணியில் எடுத்துள்ளனர் என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும்.
இப்போது அடுத்து தமிழக வீரரான குர்ஜெப்னீட் என் வீரர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக ஏதேனும் ஒரு வெளிநாட்டு அதிரடி வீரரை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவால்ட் பிரேவியஸ் எனும் வீரரை எடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இவரது அதிரடி ஆட்டம் தான் இப்போது சென்னை அணிக்கு தேவையாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இத்தனை நாளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டாடிஸ் ஆர்மி என்று செல்லமாக அழைத்தனர். ஆனால் இப்பொழுது சென்னை அணியில் பேபி மலிங்கா பேபி ருத்துராஜ் பேபி ரசீத் கான் பேபி ஏபி டிவில்லியர்ஸ் இருக்கின்றதால் சென்னை அணியை அனைவரும் இப்பொழுது பேபிஸ் ஆர்மி என்று கூறி வருகின்றனர்.



