இந்த நவீன காலத்தில் நமது உடல் நலனுக்காக நாம் எதையும் கவனமாக செய்வதில்லை. ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது கடமை ஆகும். அப்படி காலையில் எழுந்தவுடன் எளிதான முறையில் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை சேர்த்து வைப்பது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
பெரிதாக ஒன்றும் நாம் செய்யத் தேவையில்லை. தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்தால் போதும். இதுவே ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மிக நல்லதாக அமையும். காலையில் மூச்சுப் பயிற்சி செய்வதால் மனக்குழப்பம் அதிக யோசனை பதற்றம் போன்றவற்றை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த பயிற்சி நுரையீரலுக்கும் மிகவும் நல்லதாகும். நாம் மூன்று முதல் பத்து நிமிடங்கள் வரை மூச்சுப் பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு நாட்கள் நகர நகர அதை 10 முதல் 20 நிமிடங்களாக மாற்றி மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதை தள்ளி போடாமல் உடனே ஆரம்பியுங்கள்.



