வெளிநாட்டுக்காரன் மனைவி..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

Oplus_131072

வெளிநாட்டுக்காரன் மனைவி

விடுமுறை முடிந்து கணவன் வெளிநாடு
திரும்பும் நாள் வரும்போது.. அவன் மனைவி மெல்ல அருகில் வந்து இரு உதடுகளும் துடிக்க கேட்கும் அந்த கேள்வி…
“என்னங்க லீவு கொஞ்சம் அதிகமா கேட்டா கிடைக்குமா??” ..பயணம் போகும் நாள் இரவு
கொஞ்சமும் தூங்க விடாமல் “அப்போ இனிமே அடுத்த லீவு எப்ப தருவான்”
என்று நூறாவது முறையாக ஒரே கேள்வியை … “இன்னும் ஒரு வருஷம் கழிஞ்சா லீவு கேட்டா கிடைக்குமா” … என்று மாற்றி மாற்றி கேட்கும் அந்த சிறுபிள்ளைதனமான
கெஞ்சல் … வெளிநாட்டுகாரன் மனைவி.இந்த சட்டை உங்களுக்கு பெரிசா இருக்கு இது இங்கே கிடக்கட்டும்” என்று ஒரு உடை வியர்வையோடு உள்ள அன்று போட்டிருந்த சட்டை நமது ஞாபமாக தன்னோடு வைத்துகொள்ளும்
வெளிநாட்டுகாரன் மனைவி…இந்த சேலை கலர் பாருங்க இதே மாதிரிதான் எனக்கு வேணும்” என்று அறையின் கதவில் நின்று
ஒரு முறை அழைக்கும் அந்த பயண நேரத்தில் அது சேலையின் கலர் காட்ட அல்ல …இன்னும் ஒரு முறை
முத்தம் கொடுக்க அழைக்கும் அந்த வெளிநாட்டுகாரன் மனைவி… அவளுக்கு மட்டுமே வந்த கலை..காரில் ஏறி போகும், போது அவள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவது..அது யாரும் பாக்குமுன்பு சேலை தலைப்பில் நெற்றி வேர்வையோடு துடைப்பதும்….
வெளிநாட்டுகாரன் மனைவி..

கார் வீட்டின் வளைவில் திரும்பும் போது கார் கண்ணாடியில் அவள் தலை தெரிவது …எல்லோரும் போனபின்பும் அவள் மட்டும் நின்று வெறித்துப் பார்ப்பது ….. வெளிநாட்டுகாரன் மனைவி .இன்று அவர் போன் கால் வரும் என..
துணி துவைக்கும்போதும் ஜன்னல் ஓரத்தில் போன்…
அம்மி அரைக்கும்போதும் ஆட்டுகல் மீது போன்…
அடுக்களையில் திட்டின் மீது போன்..
அது எந்த நிமிஷமும் வரலாம் …. வராமல் போகலாம் ..
வெளிநாட்டுகாரன் மனைவி …இன்னைக்கு போன் வந்தால் ‘உனக்கு என்னவேணும் கேள் என்று அவர் கேட்டால்…
ஒரே பதில் கேட்டால் சம்மதிக்கணும் முடியும்னா கேட்கிறேன்னு சொல்லணும்’ ..அப்படி அவர் சம்மத்தித்தால்…. அப்போ கேட்கிற ஒரே கேள்விஇனிமே நீங்க வெளிநாட்டுக்கு போகம என்னோட இருப்பீங்களான்னு” …

அது…அது … வெளிநாட்டுகாரன் மனைவி.. படித்ததில் மிகவும் கண்ணீர் வரவைத்த பதிவு..

Read Previous

காலையில் எழுந்தவுடன் இதை செய்தால் உங்களுக்கு மனக்குழப்பமே வராது..!! எளிதான முறையில் ஆரோக்கியமாக இருக்க இந்த பதிவை பாருங்கள்..!!

Read Next

நம்மிடத்தில் இருப்பதை வைத்து திருப்தி அடையாதவர்கள் வேற எதிலுமே திருப்தி அடைய முடியாது என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular