குழந்தைகள் ஏதேனும் சாப்பிட கேட்டால் அவர்களுக்கு ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே எதையாவது செய்து தர வேண்டும் என்று அனைத்து தாய்மார்களும் ஆசைப்படுவார்கள். அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை வைத்து ஆலு பிரட் டிக்கிஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 5
பிரெட் ஸ்லைஸ் – 5
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தலையை குட்டி குட்டியாக வெட்டி வைத்து ஒரு பாத்திரத்தில் அதை போட்டு கூடவே மசித்த உருளைக்கிழங்கு நீரில் நன்கு நனைத்து பிழிந்த பிரட் மிளகாய் தூள் மிளகு தூள் சாட் மசாலா எலுமிச்சை பழ சாறு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து ஒரு தவாவை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் இதை போட்டு வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆலு பிரட் டிக்கிஸ் தயார்.



