நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று திணை அரிசியை அதிகமாக சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
திணை அரிசியை அதிகமாக சாப்பிடுவதனால் நமது உடல் எடையை மிகவும் சுலபமாக குறைத்து விடலாம். அதுமட்டுமில்லாமல் திணை அரிசி புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது. உங்களுக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அதிலிருந்து விடுபட இது ஒரு சரியான தீர்வாக அமையும்.
மேலும் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள இது மிகவும் உதவி வருகிறது. நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் இருக்கும் சர்ககரை அளவை கட்டுப்படுத்த திணையை நிச்சயமாக சாப்பிடலாம். ஆகையால் இத்தனை நற்குணங்களை உள்ளடக்கிய திணை அரிசியை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




