இன்றளவு நமது உணவுப் பழக்க மாற்றத்தின் காரணமாக பலருக்கு பல நோய்கள் இருந்து வருகிறது. அப்படி ஒரு நோய் தான் பலருக்கும் இருக்கும் வயிறுகளில் புண்கள். இது இருந்தால் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.
வயிற்றுப் புண்கள் இருக்கும் நபர்கள் கார மற்றும் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இல்லையெனில் அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்து தொலைக்காட்சியோ செல்போனோ உபயோகிக்க கூடாது.
அதைப்போலவே மனசோர்வு மற்றும் மன அழுத்தம் என்பது இல்லாமல் இருந்துதல் தேவை. சுகாதாரம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். சுகாதாரம் இல்லாத தண்ணீரை குடிக்க கூடாது. நாம் எப்போதும் சாப்பிடும் மோர் தயிர் பிரண்டை துவையல் மணத்தக்காளி கீரை மாதுளை பழம் செவ்வாழைப்பழம் ஆப்பிள் ஆகியவை மிகச் சிறந்த மருந்தாகும்.



