தசரதனுக்கும்
அவன் மனைவிகளுக்கும்
மணவாழ்க்கை சரியில்லை…..
இராமனுக்கும் சீதைக்கும்
மணவாழ்க்கை சரியில்லை….
கண்ணகி மாதவி கோவலனுக்கும்
மணவாழ்க்கை சரியில்லை….
அகலிகைக்கும் முனிவனுக்கும்
மணவாழ்க்கை சரியில்லை…
புத்தனுக்கும் யசோதைக்கும்
மணவாழ்க்கை சரியில்லை…..
பட்டிணத்தார்க்கும் மணவாழ்க்கை
சரியில்லை….
ஒவ்வொரு சாமியார்க்கும்
சித்தனுக்கும் மணவாழ்க்கைசரியாக இருந்தால் அவன் ஏன்
காட்டை நோக்கிச்
செல்கிறான்????
ஐந்துவிரலும் ஒரே நீளமாகவா இருக்கு???
ஒவ்வொரு தலையிலும்
ஒரு விதி எழுதப்பட்டிருக்கும்
அதை அழிக்க முடியுமா??
பணக்காரன் ரகசியமாகப்
புலம்புகிறான்
ஏழை வெளியில்புலம்புகிறான்
அனைவருடைய வாழ்விலும் ஓட்டையும் ஒடச்சலும் இருக்கத்தானே செய்கிறது…..
எல்லாமே சரியாக இருந்தால்
இறைவனை மறந்துவிடுவாய்
என்ற காரணத்தினால்
கூட்டியும் பெருக்கியும்
கழித்துவிடுகிறான் மனிதனின்
வாழ்க்கையை
ஆணும் புலம்புகிறான்
பெண்ணும் புலம்புகிறாள்.
இருந்தும் வாழ்க்கை
நடந்துக்கொண்டுதான் இருக்கு
அதில் நாமும் கடந்துக்கொண்டே
இருக்கோம்
வாழ்வதும் வாழ வைப்பதும்
நம்ம கையில்தான் இருக்கிறது…
புரிந்து கொண்டு வாழுங்கள்……
இல்லறம் நல்லறமாகும்..



