பெற்றோர்கள் தன் பிள்ளைகளை
டாக்டர் ஆகனும் இன்ஜினியர் ஆகணும் வக்கீல் ஆக்கணும்
என்று நினைக்கிறதை விட ஒரு மனிதனாகணும் என்று நினைங்க….
இன்றைய குழந்தைகளுக்கு மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டது..
ஒரு தகப்பன் தான் படிக்கவில்லை தன் மகனாவது படிக்க வேண்டும் என்று நினைத்து நல்லா படிக்க வைக்கிறார்..
அந்தப் பையன் நல்ல ஒழுக்கமான மாணவன்.. 12-ம் வகுப்பு வரை நன்றாக படிக்கின்றான்..
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு பொறியியல் கல்லூரியில் சேர்கிறான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த சிறிது காலத்திலே அவனுடைய
நடைமுறைகள் மாறுகிறது..
தன் தாய் அதை உணர்கிறாள் அதை கண்டிக்கிறாள்.. எல்லாம் எனக்குத் தெரியும் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று தன் தாயிடம் எதிர்த்து பேசுகிறான்… கோபத்தில் தன் மகனைப் பற்றி தாய் தன் கணவனிடம் கூற தந்தையும் அவர் பங்குக்கு மகனை கண்டிக்கிறார்…
சரி சரி என்று அவன் வீட்டுக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டான்..
தாயும் தகப்பனும் சரி கொஞ்ச நேரம் தனிமையில் இருக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.. மறுநாள் காலையில் வழக்கம் போல் அவன் கல்லூரிக்கு செல்கிறான் மாலையில் வரும்போது போதையில் வருகிறான் கண்கள் சிவந்து…
நான்தான் படிக்கவில்லை நீ நல்ல படிக்க வேண்டும் என்று நினைத்து உன்னை என்ஜினியரிங் காலேஜ் சேர்த்து விட்டேன? நீ இப்படி போதைக்கு அடிமையாகி விட்டாயே என்று தந்தை கேட்க…நான் இப்ப என்ன செய்ய வேண்டும்?? உயிரோடு இருக்க வேண்டுமா வேண்டாமா என்று கேட்கிறான்… பெற்ற வயிறு எப்படி இருக்கும் பாருங்கள்…
உங்கள் பிள்ளைகளை பிள்ளைகளாக வளருங்கள்.




