மீன் வருவல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை சரியாக செய்ய நிறைய பேருக்கு தெரியாது. மீன் வருவலை எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 6
மல்லி – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 10
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
எலுமிச்சை – 1
செய்முறை:
ஒரு ஜாரில் வெங்காயம் வரமிளகாய் இஞ்சி பூண்டு விழுது சோம்பு, சீரகம், மல்லி, மிளகு ஆகியவற்றவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனில் மசாலா கலவையை தடவி ஒரு மணி நேரம் இரண்டு பக்கமும் ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மீன் வருவல் தயார்.




