கண்டிப்பா ஒருமுறையாவது இந்த வெந்தய குழம்பு செஞ்சு பாருங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Oplus_131072

வெந்தய குழம்பு
தேவையானப் பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
உப்பு – 1 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்றவாறு)

வறுத்து அரைக்க:

சின்ன வெங்காயம் – 4
பச்சைமிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

பொடி செய்ய:

வெந்தயம் – 1 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
எண்ணை – 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உப்பு, புளி இரண்டையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும்.வெறும் வாணலியில் எண்ணை விடாமல், வெந்தயம், அரிசி ஆகியவற்றை வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.பின்பு வாணலியில் சிறிது எண்ணை விட்டு தேங்காய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். ஆறியபின், மைபோல் அரைத்துக் கொள்ளவும்.புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். புளி கரைசல் மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.வாணலியில் மீதி எண்ணையை விட்டு, எண்ணை காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், வெந்தயம் சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். கறிவேப்பிலை போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்தவுடன், வெந்தய பொடியை தூவி இறக்கவும்.

Read Previous

சொக்க வைக்கும் ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க..!! கண் கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular