மின்சார பில் 100 to 150 யூனிட்கள் குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்..!!

Oplus_131072

 

மின்சார பில் 100 to 150 யூனிட் கள் குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்…

வீட்ல பிரிட்ஜ் இருக்கா அது எந்த மாடலா இருந்தாலும் சரி அதுக்கு போட்டிருக்கிற stabilizer ஐ தூக்கிடுங்க அது தேவையில்ல ஆணி தவிர அது இரண்டு மாதங்களுக்கு சராசரியாக 30 to 45 யூனிட்கள் சாப்பிடுது. இப்ப வர்ற எல்லா பிரிட்ஜ்மே SMPS மாடல் தான் அதுக்கு stabilizer தேவையே இல்லை. அது போல டிவிக்கும் stabilizer தேவையில்லை தூக்கிக்கிடுங்க

வீட்டு பேன்கள BLDC பேனா மாத்திடுங்க அட்லீஸ்ட் தினமும் அதிக நேரம் ஓடும் பேன்களையாவது மாத்திடுங்க சாதாரண பேன் 80 வாட்ஸ் எடுக்கும் BLDC அதிகப் பட்சம் 32 வாட்ஸ் தான் அதையும் ஸ்லோவில் வைத்தால் 15 வாட்ஸ் தான் தினமும் 20 மணி நேரம் ஓடும் ஒரு சாதா பேனை BLDC பேனாக மாற்றினால் சராசரியாக 60 யூனிட் மிச்சமாகும்.

பழைய சோக் டைப் டியூப் லைட்களை LED டியூப்பா மாத்திடுங்க அப்படி மாத்தினா ஒரு டியூப்க்கு 4 யூனிட் மிச்ச மாகும்.

மோட்டார் சின்னதா சர்வீஸ் பண்ணி பேரிங்க்கு கிரீஸ் அடிச்சி விடுங்க சராசரியா 10 யூனிட் மிச்சமாகும்.வாசிங் மெஷின், RO பில்டர், மிக்ஸி எல்லாம் நிறைய கரண்ட் எடுக்காது அதனால அது ஓடுதேன்னு கவலைப் படாதீங்க.AC இன்வெர்டர் AC னா stabilizer தேவையில்லை உங்க AC நேம் பிளேட் அல்லது மேனுவலை பாருங்க அதுல இன்புட் ரேஞ்ச் 140 to 260 ன்னு போட்டிருந்தா stabilizer தேவையில்லை & AC பில்டரை 15 நாட்களுக்கு ஒருக்கா கழட்டி சுத்தம் பண்ணி போடுங்க இதன் மூலமா சராசரியா 15 யூனிட் மிச்சப் படுத்தலாம்.

Read Previous

நோய்கள் வராமல் கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கிய குறிப்புகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தாய் மற்றும் தந்தையிடம் மகன் கேட்ட கேள்வி..!! அதற்கு அவர்கள் கூறிய மனதை கலங்க வைக்கும் பதில்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular