நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகள் நிறைய இருக்கின்றது. அந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை ஆகும். இல்லையெனில் பிற்காலத்தில் பெரும் பாதிப்பை கூட சந்திக்க நேரிடும். அப்படி இன்று உங்களின் சிறுநீரகத்தை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
அப்படி பாதுகாக்காவிடில் சிறுநீர் தொற்றுக்கு நாம் பலியாகி விடுவோம். எலுமிச்சை பழச்சாரில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. இது நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் சிவப்பு திராட்சையின் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஏ நமது சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
அது மட்டும் இல்லாமல் சிவப்பு குடைமிளகாய் சாப்பிட்டால் நமது சிறுநீரகம் பாதுகாப்பாக இருக்கும். மேலும் கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.



