தீராத நோயைத் தீர்க்கும் இந்தப் ‘பூ’… இப்படி சாப்பிடுங்க..??

தீராத நோயைத் தீர்க்கும் இந்தப் ‘பூ’… இப்படி சாப்பிட்டுங்க..

 

வாழைப்பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

பலவிதமான மருத்துவ குணங்களையும், உணவுப் பயன்பாடுகளையும் கொண்டது வாழைப்பூ. வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது.

மண்ணுக்குள் இருக்கும் வாழை கிழங்கில் இருந்து மேலே இருக்கும் வாழை இலைகள் வரை அனைத்துமே நமக்கு மருத்துவ குணமாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் வாழைப்பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாக விளங்குகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு வாழைப்பூ ரசம் நல்ல தீர்வாக அமைகிறது. கருப்பை கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. மலட்டுத்தன்மையை போக்க உதவுகிறது. வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்றுப் புண்களை ஆற்றவும், செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அஜீரணக் கோளாறுகளுக்கு வாழைப்பூவை வேகவைத்து மிளகு, சீரகம் சேர்த்து அதன் சாற்றை குடிப்பது நல்லது. வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல மருந்தாகிறது. வாழைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது உள்ளிட்ட பல பயன்களை கொடுக்கும் வாழைப்பூவை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்து டாக்டர் நித்யா கூறியுள்ளார்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு, பைல்ஸ் தொடர்பான உதிரப்போக்கு, அல்சர் தொடர்பான பிரச்னைகளுக்கு வாழைப்பூ பெரிய நன்மைகளை தருகிறது. வாழைப்பூவை உள்ளே இருக்கும் மடலை எடுத்துவிட்டு, கட் செய்து, சீரகம் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால், அல்சர் பிரச்னையை தீர்க்கும், ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். தேவைப்பட்டால் இதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். வாழைப்பூவில் வைட்டமின் ஏ, இ, சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கால்சியம், மெக்னீசியம் அதிகம் இருப்பதால், தொடர்ந்து 48 நாட்கள் இந்த வாழைப்பூ சாறு குடித்து வரும்போது உடலில் இருக்கும் பல நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, வயிற்று புண்கள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல பிரச்னைகளை தீர்க்கும்.

 

Read Previous

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் ராசியினர் இவர்கள்தான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

கொய்யா இலை எப்படி மருந்தாக பயன்படுகிறது தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular