பீகார் மாநிலம் பாட்னாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனை பார்க்க அச்சிறுமி சென்றபோது, காதலுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதில் அச்சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




