குழிப்பணியாரம் சரியாக வரவில்லையா?.. இந்த மாதிரி செய்ங்க போதும்..!!

எப்போதாவது ஒருமுறை செய்வதால் பணியாரக் கல் காய்ந்து போய் பணியாரம் சரியாக வராது. அதை தவிர்க்க எப்போதும் பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி வைத்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள்.
அப்படி ஊற்றி வைத்தால் அந்த எண்ணெய் சிக்கு வாடை அடிக்கும். பின்பு கழுவினாலும் போகாது.
அதை தவிர்க்க பணியாரம் செய்வதற்கு 1-2 மணி நேரம் முன்பாக பணியாரக் கல்லை எடுத்து நன்கு கழுவி அதில் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து இறக்கி வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் பணியாரம் சுடும் போது ஒட்டாமல் வரும்.
மேலும் எப்போதுமே பணியாரக் கல்லில் மாவு ஊற்றும்போது கல் நன்றாக சூடாகி இருக்க வேண்டும்.
மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பயன்படுத்தும் மாவில் உளுந்து அதிகமாக இல்லாமல் இருந்தால் பணியாரம் ஒட்டாமல் வரும். ஆப்பம் செய்வது போல ஒரு பங்கு புழுங்கல் அரிசி ஒரு பங்கு பச்சரிசி சிறிதளவு மட்டும் உளுந்து வெந்தயம் சேர்த்து நைசாக அரைத்து அந்த மாவில் செய்தால் பணியாரம் மிருதுவாக இருக்கும்.
செய்து முடித்தவுடன் பணியார கல்லை ரொம்ப தேய்த்து கழுவ கூடாது. ஆனால் எண்ணெய் பசை இல்லாமல் கழுவி அதை கவர் செய்து வைக்க வேண்டும்.

Read Previous

ஒரே மாதத்தில் முடி வளர வேண்டுமா?.. இந்த சின்ன பொருள் இருந்தாலே போதும்..!!

Read Next

நாயாகப் பிறவி எடுப்பது ஏன் கேவலம்?.. எல்லாம் அவன் செயல்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular