திமுகவை ஒழிப்பேன் எனக்கூறி பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், தலைவராவதற்கு முன்பாக எங்களிடம் பேசியதை பொது வெளியில் சொல்ல முடியாது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘பாஜகவினர் முதலில் கூட்டணி ஆட்சியா? இல்லை தனித்து ஆட்சியா? என்ற பிரச்னையை சரிசெய்யட்டும். அதன்பின் திமுக குறித்து பேசலாம்’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த ஆண்டு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடத்தப்படும்’ என்றார்.




