சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட பதிவில், “ ‘ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது’ என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்?. இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?” என்றார். மேலும், இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார்.




