சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். காவலர்கள் இளைஞரை தாக்கி கொலை செய்ததாக உறவினர்களால் சொல்லப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக அண்ணாமலை, “அப்பாவிகளை போலீசார் தாக்குவது திமுக ஆட்சியில் தொடருகிறது. 2022ல் இருந்து 23 பேர் போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்துள்ளனர். ஏழை எளிய மக்களை திமுக அரசு கண்டுகொள்ளாது” என X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




