பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை காண்பதன் மூலம் மனத்துயர் விலகும். செவ்வாய்கிழமை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.




