போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் கே.பிரேம் ஆனந்தும், கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை.08) உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.




