உத்தரப் பிரதேசம்: காசியாபாத்தில் ஒரு வீட்டில் மாமியாருக்கும், மருமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அகன்ஷா என்ற பெயர் கொண்ட மருமகள் மாமியாரை தாக்கினார். பின்னர் படிக்கட்டில் தரதரவென இழுத்து சென்றார். இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போலீஸ் புகார் கொடுத்தும் மருமகள் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யாத நிலையில் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.




