திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திருவாரூரில் காலை உணவுத் திட்டத்தில் 37,000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் 4,720 வீடுகள் கட்ட ஒப்புதல் தரப்பட்டு 1,249 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ரூ.80.64 கோடியில் நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்தான் திருவாரூர் மாவட்டத்துக்கு 5 புதிய ரயில்கள் விடப்பட்டன” என்றார்.




