கோயில் நிதியில் திமுக அரசு கல்லூரி கட்டியதாக இபிஎஸ் குற்றம் சாட்டிய நிலையில், ‘படிப்பு என்றால் ஏன் உங்களுக்கு கசக்கிறது’ என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர், ‘பாஜக தலைவர்களே கோயில் நிதியில் கல்லூரி திறக்க கூடாது என கூறவில்லை. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தோம். ஆனால், ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சி இபிஎஸ்-க்கு தைரியம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.




