அசாம்: விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்..!!

அசாமில் மனைவிடம் விவாகரத்து கிடைத்துவிட்டதாகக் கூறி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் கொண்டாடி உள்ளார்.

நல்பாரி மாவட்டம் போரோலியபாராவை சேர்ந்த மணிக் அலி என்பவரின் மனைவி திருமணத்திற்கு மீறிய உறவிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் இருந்து 2 முறை மனைவி வெளியேறியதனாலும் தனது குழந்தைக்காகச் சமரசம் செய்து, அவரை மணிக் அலி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தால் உற்சாகமடைந்த மணிக் அலி,  40 லிட்டர் பால் வாங்கி,  தனக்குத்தானே பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்.

தனக்கு இன்று முதல் எனக்கு விடுதலை எனக் கூறிக்கொண்டே அவர் பாலாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

Read Previous

தமிழ்நாடு அரசு செவிலியர் வேலைவாய்ப்பு..!! 112 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.18,000.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சுவையான காரசாரமான முட்டை கொத்து சப்பாத்தி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular