உடைத்து ஊற்றிய முட்டைகுழம்பு செய்வது எப்படி தெரியுமா..??

உடைத்து ஊற்றிய முட்டைகுழம்பு
தேவையான பொருட்கள்
முட்டை – 5
சின்னவெங்காயம் – 15
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் மூடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

சின்ன வெங்காயத்தைபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் மிளகு, சீரகம் மூன்றையும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

சின்ன வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

அதனுடன் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

இதனுடன் அரைத்த தேங்காய் விழுது மூன்று டம்ளர் தண்ணீர் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு குறித்து ஓரளவு கெட்டியானவுடன் முட்டையை உடைத்து ஊற்றலாம்.

முட்டை வெந்து வரும்போது குழம்பும் இன்னும் கெட்டியாகும் .
அதனால் குழம்பு ரொம்ப கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

குழம்பில் முட்டையை உடைத்து ஊற்றும் போது கொஞ்சம் தள்ளி தள்ளி ஊற்ற வேண்டும்.

பின்பு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்தால் முட்டை நன்கு வெந்துவிடும்.
இப்பொழுது மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான உடைத்துவிட்ட முட்டை குழம்பு ரெடி.

Read Previous

இது தான் வாழ்க்கை..!! இது தான் பயணம்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Read Next

மனதை உலுக்கிய உண்மைச் சம்பவம்..!! படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular