ஆந்திரா: சியப்பாடு கிராமத்தை சேர்ந்த தம்பதி கோபால் – சுஜாதா. பாபு என்பவருடன் சுஜாதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கோபால் கண்டித்த நிலையில் கிராம பஞ்சாயத்து மூலம் கள்ளக்காதலை கைவிடுவதாக சுஜாதா கூறினார். ஆனாலும் தகாத உறவை அவர் தொடர்ந்ததால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவியை கடந்த ஜூலை 17ல் கொன்ற கோபால் சடலத்தை சாக்கு மூட்டையில் மறைத்தார். இதை தற்போது கண்டுபிடித்த போலீசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரிக்கின்றனர்.




