மும்பை: விஜய் (35) – கோமல் (28) தம்பதிக்கு 8 வயதில் மகன் உள்ளான். கோமலுக்கு மனு என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த விஜய் கோமலை பல முறை கண்டித்தார். இதனால் கோபமடைந்த கோமல் கணவரை காதலன் உதவியுடன் கொன்று உடலை கண்டந்துண்டமாக வெட்டினார். பின்னர் வீட்டிலேயே உடலை புதைத்து மேலே டைல்ஸ் போட்டு இருவரும் மூடினர். துர்நாற்றம் வீசியதால் இருவரும் போலீசில் சிக்கியதையடுத்து கைது செய்யப்பட்டனர்.




