மோசமாக காயமடைந்து நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் நிலையில், கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும் என்றும் சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




