தவெகவின் 2வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், மாநில மாநாடு ஆகஸ்டு 21ஆம் தேதி அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்துடன் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




