மதுரையில் கடந்த 21-ல் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்ற அரியலூரை சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா உயிரிழந்துள்ளார். வீடு திரும்பும் போது திருச்சி அருகே நடந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆக.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக பிரபாகரன், ரித்திக் ரோஷன், காளிராஜ் ஆகிய மூவர் மாநாட்டிற்கு முன்பும் பின்பும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார்.




