வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பிரிக்கும் செக்கு இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைக்கும் இயந்திரங்களை பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 50%, இதர விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும். மின் இணைப்பு வசதி கொண்ட சொந்த கட்டிடம் இருப்பது அவசியம்.




